« Back to word list

நாபால் (Nabal)

(மதிகேடன்)

யூதாவைச் சேர்ந்த, மாகோனிலிருந்த ஓர் ஐசுவரியவான். அவனுடைய ஆட்டு மந்தைகள் கர்மேலில் இருந்தன. தாவீது வனாந்தரத்தில் அலைந்து திரிந்த நாள்களில், இவனிடம் உதவி கேட்டு ஆள்களை அனுப்பினபோது அவன் உதவி கொடுக்க மறுத்தான். அப்போது தாவீதும் அவனுடைய மனுஷரும் ஆயுதம் தரித்துக் கொண்டு, அவனைக் கொன்று போடப் புறப்பட்டார்கள். நாபாலின் மனைவி அபிகாயில் இதைக் கேள்விப்பட்டு, தேவையான சாமான்களை எடுத்துக்கொண்டு, தாவீதைச் சந்தித்து மன்னிப்புக்கேட்டு சமாதானப்படுத்தினபோது அவன் திரும்பிப்போனான். அபிகாயில் திரும்பி வீட்டுக்குப் போய், நாபால் வெறித்திருந்ததைக் கண்டு, மறுநாள் காலையில், அவனுக்கு வர இருந்த விதியைச் சொல்லவே, அவன் பயத்தினால் வியாதிப்பட்டு பத்து நாள்களில் மரித்தான் (1 சாமு. 25:1-42).

அபிகாயில் பின்பு தாவீதின் மனைவிகளில் ஒருத்தியானாள் (1 சாமு. 30:5, 2 சாமு. 2:2).

« Prev 361 / 564 Next »