« Back to word list

நாபோத்து (Naboth)

இவன் யெஸ்ரயேல் தேசத்தான். இவனுக்கு ஆகாப் இராஜாவின் அரண்மனைக்கருகே ஒரு திராட்சத் தோட்டம் இருந்தது. இராஜா இதைக் கிரயத்துக்கு வாங்கிக்கொள்ளக் கேட்டபோது, அவன் சம்மதிக்காததி னிமித்தம் ஆகாபின் மனைவி யேசபேல், நாபோத்துக்கு விரோதமாய்ப் பொய்க் குற்றஞ் சாட்டி, அவனையும், அவனுடைய குமாரரையும் கல்லெறிந்து கொல்லுவித்தாள். ஆகாப் திராட்சத் தோட்டத்தைச் சொந்தமாய் எடுக்கப் போன வேளையில், எலியா அவனைச் சந்தித்து அவன்மேல் வரப் போகிற தேவ தீர்ப்பை அறிவித்தான் (1 இரா. 21:1-24). அதன்படியே, பின்பு யேசபேலின் மகனாகிய யோராமின் சவம், நாபோத்தின் நிலத்தில் எறியப்பட்டது (2இரா.9:21-26). யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்தின் எருவைப் போலாயிற்று (2 இரா. 9:37). ஆகாப் கொல்லப்பட்டபோது, அவன் இரத்தத்தைச் சமாரியாவின் குளத்தில் கழுவும்போது, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கின.

இவ்விதமாய் கர்த்தருடைய வார்த்தை நிறைவேறிற்று (1 இரா. 22:38).

« Prev 362 / 564 Next »