« Back to word list

நியாயாதிபதிகளின் காலம்

(கி.மு.1427 -கி.மு.1095)

இப்படிப்பட்ட காலத்தில் தேவன் ஜனங்களின் பாதுகாப்புக்காக காலத்துக்குக் காலம் நியாயாதிபதிகளை எழுப்பினார். அவர்கள் ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை மீட்டுக்கொண்டு தங்கள் தங்கள் ஊரிலிருந்து அதிகாரம் செலுத்தினார்கள்.

தேவ ஆவியினால் இவர்கள் நடத்தப்பட்டார்களென்பதை ஜனங்கள் அறிந்து அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள். இந்த நியாயாதிபதிகளைப் பற்றி நியா. 3:8-16:31 வரை குறித்துள்ளது. 480 வருட காலமாய் இப்படி நடந்தது (1 இரா. 6:1). அதாவது எகிப்திலிருந்து புறப்பட்ட காலம் தொடங்கி, தேவாலயம் கட்டத் தொடங்கின காலம் வரை நியாதிபதிகளின் காலம் (332 வருடங்கள்) எனலாம்.

இவர்களில் விசுவாசத்தினால் நற்சாட்சி பெற்றவர்கள் கிதி யோன், பாராக், சிம்சோன், யெப்தா, சாமுவேல் என்பவர்களே (எபி. 11:32),

ஏலியின் நாள்களில் பெலிஸ்தரோடு யுத்தம் நடந்தபோது, தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது. பெலிஸ்தர் ஏழு மாதம் அதை வைத்திருந்தார்கள் (1 சாமு. 6:1). திருப்பி அனுப்பிவிட்டபோது அதைக் கீரியாத் யாரீமின் மனுஷர் அபினதாபின் வீட்டில் வைத்தார்கள். தாவீது அதை எருசலேமுக்குக் கொண்டு போகும் வரை இருபது வருஷம் அங்கே இருந்தது.

« Prev 368 / 564 Next »