நெபுசராதான் (Nabuzaradan)
நேபுகாத்நேச்சாரின், காவல் சேனாபதி. எருசலேம் கைப்பற்றப் பட்டபின் இவன் ஆலயத்தையும், அரண்மனையையும், கட்டடங்களையும் சுட்டெரித்து ஜனங்களையும் சிறையாக்கிக் கொண்டு போனான் (2இரா. 25:8-11; எரே. 39:9; 52:12-30). அங்கிருந்த பிரதானிகள், மந்திரிகள், ஆசாரியரான அறுபது பேரை இவன் ரிப்லாவிலிருந்த இராஜாவிடம் கொண்டு போக, இராஜா அவர்களை வெட்டிக் கொன்றான் (2 இரா. 25:18-21). மற்ற ஜனங்களையும் சிறைபிடித்துக் கொண்டு போனான்.
எரேமியாவை அழைத்து, அவனைப் பாதுகாத்து, அவனுக்கு வேண்டியவைகளைச் செய்யும்படி, இராஜா நேபுசராதானுக்கு கட்டளை கொடுத்தான் (எரே. 39:11-14).