« Back to word list

நோப் (Nob)

(மேட்டு நிலம்)

எருசலேமுக்கு அருகே, பென்யமீனுக்குச் சேர்ந்த ஒரு பட்டணம். இது ஒலிவ மலையிலிருந்திருக்கலாம் (நெகே. 11:32; ஏசாயா. 10:32). தாவீது சவுலுக்குத் தப்பி ஓடித்திரிந்த நாள்களில் போன இடம் இதுவாயிருக்கலாம். அகிமெலேக் அவனைப் பட்சமாய் ஏற்றுக்கொண்டதினிமித்தம், சவுல் ஆசாரியரையும் அங்கே குடியிருந்தவர்களையும், ஆடுமாடுகளையும் கொன்றான் (1 சாமு. 22:9- 11,19).

« Prev 374 / 564 Next »