« Back to word list

நோவா (Noah)

(ஓய்வு)

பூர்வீகக் கோத்திரத் தலைவன். ஆதாமிலிருந்து பத்தாம் தலைமுறையான லாமேக்கின் மகன் (1 நாளா. 1:4). இவன் பிறந்த போது "நம்மைத் தேற்றுவான்" என்று சொல்லி, லாமேக்கு இவனுக்கு நோவா என்று பேரிட்டான் (ஆதி 5:29). நோவாவின் காலத்திலிருந்த ஜனங்கள் துஷ்டராயும், தேவபயமற்றவர்களாயும் இருந்தார்கள். இவனுக்கோ கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது. நோவா நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். தேவனோடு ஐக்கியப்பட்ட ஜீவியம் செய்தான் (ஆதி.6:1-9). அக்காலத்திலிருந்த அவபக்தியுள்ள ஜனங்களுக்கு நீதியைப் பிரசங்கித்தான் (2 பேதுரு. 2:5; எசே. 14:14).

தேவன் நோவாவுக்குத் தரிசனமாகி, பூமி கொடுமையால் நிறைந்திருந்தபடியால் அதை அழிக்கப் போகிறதாகவும், அதற்குமுன் ஒரு பேழையைச் செய்யவும் சொன்னார். அவன் அதைச் செய்து கொண்டு ஜனங்களுக்கும் பிரசங்கித்தான்.

பின்பு கர்த்தரின் சொற்படி, நோவா தன் குடும்பத்தோடும், மிருக ஜீவன்களோடும் பேழைக்குள் பிரவேசித்தான் (ஆதி. 7:1).

ஜலப்பிரளயம் உண்டாகி, பூமியிலுள்ள வஸ்துக்களனைத்தையும் அழித்தபின், நோவாவும் குடும்பமும் பேழைக்குள்ளிருந்த சகல ஜீவ பிராணிகளும் புறப்பட்டு வந்தன (ஆதி. 8:18).

தேவன் நோவாவையும், குமாரரையும் ஆசீர்வதித்து, அவர்களோடு ஓர் உடன்படிக்கையும் செய்தான் (ஆதி. 9:1,8).

இவைகளின்பின் நோவா ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதில் குடித்து வெறித்திருந்தபோது, காம் அவனை இகழ்ந்து பேசினதினிமித்தம் சபிக்கப்பட்டான் (ஆதி. 9:22-25).

ஜலப்பிரளயம் உண்டானபோது நோவாவுக்கு 600 வயது; மரிக்கும்போது 950 வயது (ஆதி. 7:11; ஆதி. 9:29).

அவனுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். அவர்களால் பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள் (ஆதி. 9:19).

« Prev 375 / 564 Next »