« Back to word list

பர்சிலா (Barzila)

(இரும்பு போன்றவன்)

இவன் ரோகிலிம் ஊரான்; ஒரு கிலேத்தியன்; தாவீது அப்சலோமுக்குத் தப்பி ஓடி, மக்னாயீமில் சேர்ந்தபோது, இவன் தாவீதுக்கும் அவன் ஜனங்களுக்கும் தின்பண்டங்களைக் கொண்டுவந்தான் (2 சாமு. 17:27-29).

பிற்பாடு தாவீது எருசலேமுக்குத் திரும்பி வருகையில், பர்சிலா, அவனோடு யோர்தான் துறை மட்டும் வந்தான். தாவீது தன்னோடு எருசலேமுக்கு வரும்படி அவனை அழைத்தபோது, தான் வயோதிபனாயிருந்தபடியால் போகச் சம்மதியாமல், தன் மகன் கிம்காமை கூடப்போக அனுப்பிவைத்தான் (2 சாமு. 19:31-40).

தாவீது மரிக்குமுன், கிம்காமுக்குத் தயை செய்யும்படி சாலொமோனுக்குச் சொன்னான் (1 இரா. 2:7).

2. மேற்சொல்லப்பட்ட பர்சிலாவின் மருமகன் அவனுடைய பேரை எடுத்துக்கொண்டான் (எஸ்றா. 2:61; நெகே. 7:63).

3. மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேல், சவுலின் மகளாகிய மீகாளை விவாகம் செய்தான் (2 சாமு. 21:8).

« Prev 381 / 564 Next »