பாசான் (Bashan)
(கனியுள்ள)
யோர்தான் நதிக்குக் கிழக்கேயிருந்த ஒரு தேசம். இது கீலேயாத்திலிருந்து எர்மோன் மலை மட்டும் வியாபித்திருந்தது (உபா. 3:10; யோசுவா. 12:5).
இஸ்ரவேலர் யோர்தானைக் கடக்குமுன் இதைக் கைப்பற்றினார்கள். இதன் கடைசி இராஜாவாகிய ஓக் என்பவனை எத்ரேயுவில் கொன்றார்கள் (எண். 21:33-35).
இத்தேசம் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டது (உபா.3:13). இது செழிப்பான மேய்ச்சல் தரையுள்ள இடம். கொழுத்துப் போன ஆடுமாடுகளுக்குப் பெயர் பெற்ற தேசம் (உபா. 32:14; எசே. 39:18).
பாசான் தேசத்து பலத்த எருதுகள் என்பது மிருக சுபாவமுள்ள கொடூர மனுஷரைக் கருதுகிறது.
இங்கு கர்வாலி மரங்களும் இருந்தன (ஏசாயா. 2:13; எசே. 27:6).
இத்தேசம் பாழாய்ப் போகுமென்று தீர்க்கதரிசிகள் கூறி யிருந்தார்கள் (ஏசாயா. 33:9; நாகூம் 1:4; எரே. 22:20; சக. 11:2).