பாபேல் (Babel)
(தாறுமாறு)
ஜலப்பிரளயமுண்டாகி 120 வருடங்களுக்குப்பின் சிநேயார் தேசத்தில் குடியிருந்த ஜனங்கள் ஒரு நகரத்தையும், அதிக உயரமான கோபுரத்தையும் கட்டியெழுப்பத் தொடங்கினார்கள். அப்போது ஜனங்கள் ஒரே கூட்டமாயிருந்து ஒரே பாஷையைப் பேசினார்கள். ஜனங்கள் தங்களுக்கு ஒரு பேர் உண்டாகும்படியும், தங்களுக்கென்று ஒரு கோட்டையைக் கட்டி, ஓரிடத்திலிருக்கும் படியும், இதைச் செய்தார்கள் என்று கர்த்தர் கண்டு, ஒருவன் பேசுவதை மற்றவன் அறியாதபடி, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். அதினிமித்தம் ஜனங்கள் கட்டுவேலையை விட்டதோடு, பூமியின்மீதெங்கும் சிதறிப்போனார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் தாறுமாறாக்கினபடியால் "பாபேல்" என்னும் பெயர் வந்தது (ஆதி. 11:1-9).
இப்படிப்பட்ட கட்டடம் எழுப்பப்பட்டதை பற்றி அத்தாட்சி இப்போது இல்லை.