« Back to word list

பாராக் (Barak)

(மின் ஒளி)

இவன் நப்தலி கோத்திரத்து அபினோகாளின் மகன். யாபீனின் சேனாதிபதியாகிய சிசெரா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் செய்ய வந்தபோது, தெபொராள் தீர்க்கதரிசி, இவனை அழைத்து சிசெராவுக்கு எதிர்கொண்டு போகும்படி சொன்னாள். அவன் தெபொராளையும் கூட வரும்படி கேட்டான். அவன் அப்படியானால் வரும் மேன்மை, ஒரு ஸ்திரீக்குக் கிடைக்குமென்று சொல்லி, கூடப்போனான். அவன் தாபோர் மலைமேல் நப்தலி, செபுலோன் புத்திரரில் பதினாயிரம் பேரோடு போனான். சிசெரா தொளாயிரம் இரதங்களோடு கீசோன் பள்ளத்தாக்குக்கு வந்தான். சடுதியாய்க் கர்த்தர் மழையைப் பெய்யப் பண்ணி, பள்ளத்தாக்கைச் சதுப்பாக்கினதினிமித்தம் ஜனங்களும், இரதங்களும் அழிந்து போயின. சிசெரா தப்பியோடி யாகேலுடைய கூடாரத்துக்குள் போயிருக்கையில் கொல்லப்பட்டான். பிற்பாடு தெபொராள் பாடின பாட்டில் இவையெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன (நியா.4, 5ஆம் அதிகாரங்கள்).

எபி. 11:32இல் பாராக்கு விசுவாசத்தில் நற்சாட்சி பெற்றவர்களில் ஒருவன் என்று குறித்துள்ளது.

« Prev 393 / 564 Next »