பெசலெயேல் (Bezaleel)
(தேவனுடைய நிழலிலிருப்பவன்)
1. யூதா கோத்திரத்து காலேபின் குடும்பத்தைச் சேர்ந்த ஊரி என்பவனின் மகன். ஆசரிப்புக்கூடார வேலை செய்வதற்காக இவன் தேவனால் அழைக்கப்பட்டு, விசேஷ வரங்கள் பெற்றான். பொன், வெள்ளிவேலை செய்வதற்கும், மற்றும் சகலவித வேலைகளை யூகித்துச் செய்யத்தக்க ஞானமும் புத்தியும் உண்டாகும்படி ஆவியின் வரம் பெற்றவன் (யாத். 31:1-11).
2. எஸ்றாவின் நாள்களில் மறு ஜாதி மனைவியைத் தள்ளி விட்டவர்களில் ஒருவன் (எஸ்றா. 10:30).