« Back to word list

பெத்சாயிதா (Bethsaida)

(மீன் பிடிக்கும் வீடு )

இந்தப் பட்டணம் கலிலேயாவுக்கு வடபாகத்தில் யோர்தானுக்கு அருகிலிருந்தது. இந்தப் பெயருள்ள இரண்டு இடங்களோ அல்லது ஒரே இடம் தானோ என்று நிச்சயமில்லை.

1. சிலர் இது யோர்தானுக்குக் கிழக்குப் பக்கத்திலிருந்த வனாந்தரமென்றும், இங்கே தான் ஐயாயிரம் பேர் போஷிக்கப் பட்டார்களென்றும் சொல்லுகிறார்கள் (மாற்கு. 6:32; லூக்கா. 9:10). இங்கே ஏரோது பிலிப்பு ஒரு பட்டணத்தைக் கட்டி ஆவியா என்று பேரிட்டான். இயேசுவும் இளைப்பாறும்படி சீஷருடன் இவ்விடம் போனார்.

இன்னும் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதாவைப் பற்றியும் சொல்லியிருக்கிறது (யோவான். 12:21). பிலிப்பு, அந்திரேயா, பேதுரு என்பவர்களின் ஊர். இது கப்பர்நகூமுக்கு அருகில் இருந்தது.

பெத்சாயிதா ஊரில் இயேசு ஒரு குருடனைச் சொஸ்தமாக்கினார் (மாற்கு. 8:22-26).

பின்பு இயேசு பெத்சாயிதாவைக் கடிந்துகொண்டார் (மத். 11:21).

« Prev 409 / 564 Next »