« Back to word list

பெனாதாத்

(ஆதாதின் மகன்)

ஆதாத் சீரியரின் தெய்வம். அவர்களுடைய இராஜாக்கள் தெய்வமக்கள் எனப்பட்டார்கள். இந்தப் பெயருள்ள மூன்று பேர் உண்டு. இவர்கள் தமஸ்குவில் இராஜாக்களாயிருந்தவர்கள்.

1. பெனாதாத் சீரியரின் இராஜா. எசியோனின் மகனாகிய தபரிமோனின் குமாரன். இஸ்ரவேல் இராஜாவாகிய பாஷா, யூதாவுக்கு விரோதமாய் ராமாவைக் கட்டினான்.

யூதா இராஜாவாகிய ஆசா, பெனாதாத்திடம் உதவி கேட்டான். அப்பொழுது அவன் தன் ஆள்களை அனுப்பி அநேக பட்டணங்களைப் பிடித்துக் கொண்டான். பாஷா அதைக் கேட்டபோது, கட்டுகிறதை விட்டுவிட்டான் (1 இரா. 15:18-21; 2 நாளா. 16:1-6) (கி.மு.860).

2. மேற்சொல்லப்பட்ட பெனாதாத்தின் மகன். இவன் பெயரும் பெனாதாத். இவன் ஆகாப் இராஜாவின் நாள்களில் சமாரியாவைப் பிடிக்கப்போன வேளையில் தோற்கடிக்கப்பட்டான். அடுத்த வருடம் திரும்பவும் யுத்தம்செய்து தோல்வி அடைந்தாலும், ஆகாப் அவனைத் தப்ப வைத்து சமாதானம்பண்ணினான் (1 இரா. 20:1-34).

அசீரியர் பெனாதாத்துக்கு விரோதமாய் வந்தபோது ஆகாபும் மற்றவர்களும் அவனுக்கு உதவிசெய்து, நடந்த யுத்தத்தில் அசீரியருக்கு ஜெயம் கிடைத்தபோதிலும் அவர்களில் அநேகர் கொல்லப்பட்டார்கள் (கி.மு.854).

பின்பு பெனாதாத் இராணுவத்தை எல்லாம் கூட்டிக் கொண்டு சமாரியாவை முற்றுகை போட்டான். கர்த்தர் அவர்கள் பாளயத்திலே சடுதியான திகில் உண்டாகச் செய்ததினிமித்தம் தங்கள் பிராணன் தப்பும்படி ஓடிப்போனார்கள் (2 இரா. 6:24; 7:7).

எலிசா தமஸ்குவுக்குப் போயிருக்கையில், பெனாதாத் வியாதிப் பட்டபோது ஆசகேலை எலிசாவிடம் அனுப்பினான். அவன் திரும்பி வந்து பெனாதாத்தைக் கொன்றுபோட்டு, தான் இராஜாவானான் (2 இரா. 8:7-15).

.சீரியாவின் இராஜாவாகிய ஆசகேல் மரித்தபின், அவனுடைய குமாரனாகிய பெனாதாத் இராஜாவானான். யோவாஸ் இவனோடு யுத்தம்பண்ணி, தன் தகப்பன் இழந்துபோன பட்டணங்களைத் திரும்பப் பிடித்துக் கொண்டான் (2 இரா. 13:24,25).

« Prev 417 / 564 Next »