« Back to word list

பெனாயா (Benaiah)

(தேவன் கட்டி எழுப்பினார்)

இவன் யூதேயாவிலுள்ள கப்செயெல் ஊரான். யோய்தாவின் குமாரனும், செய்கைகளில் வல்லவனுமாயிருந்தான். தாவீது தன் மெய்க்காவலருக்கு இவனைத் தலைவனாக வைத்தான் (2 சாமு. 23:20-23).

சாலொமோன் இராஜாவாகிறதற்கு இவன் உதவியாயிருந்தான் (1 இரா. 1:8,38,44). சாலொமோனின் கட்டளைப்படி இவன் யோவாபைக் கொன்றான் (1 இரா. 2:28-35).

2. பிரத்தோனியனாகிய பெனாயா. இவன் தாவீதின் சேனாதிபதிகளில் ஒருவன். இவன் வகுப்பில் 24,000 பேர் இருந்தார்கள் (2 சாமு. 23:30; 1 நாளா. 27:14).

இந்தப் பெயருள்ள இன்னும் பன்னிரெண்டு ஆள்கள் வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்குபேர் எஸ்றாவின் காலத்தில் அந்நிய பெண்களை விவாகம் செய்தவர்கள் (எஸ்றா. 10:25,30,35,43).

« Prev 418 / 564 Next »