பென்யமீனர்
இவர்கள் யுத்தம் செய்வதில் வல்லவர்களும், சாமர்த்திய முள்ளவர்களும் இடது கை பழக்கமுள்ளவர்களுமாயிருந்தார்கள். கவண்கள் எறிவதில் அதிக நுட்பமுள்ளவர்கள் (நியா. 20:15,16; 1 நாளா. 8:40).
பென்யமீன் பீறுகிற ஓநாய் என்று யாக்கோபு தன் கடைசி வார்த்தையில் சொன்னான் (ஆதி. 49:27).
நியாயாதிபதிகளின் நாள்களில் இஸ்ரவேலை மோவாபியர் கையிலிருந்து விடுவித்த ஏகூக் ஒரு பென்யமீனன் (நியா. 3:15).
தெபொராள், பாராக் என்பவர்களுடன் பென்யமீனர்
சிசெராவுக்கு விரோதமாக யுத்தம் செய்தார்கள் (நியா.5:14).
இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுல் பென்யமீனன் (1 சாமு. 9:1). எஸ்தரும் பென்யமீன் கோத்திரத்தாள் (எஸ். 2:5). தாவீதைச் சபித்தவன் ஒரு பென்யமீனன் (2 சாமு. 16:5).
இராஜ்யம் பிரிந்தபோது, ரெகொபெயாம் பக்கத்தில் யூதா பென்யமீன் கோத்திரத்தாரும் நின்றார்கள் (1 இரா. 12:21). இன்னோம் பள்ளத்தாக்கு பென்யமீனரின் தெற்கு எல்லை (நெகே.11:30).
அப்போஸ்தலனாகிய பவுலும் இந்தக் கோத்திரத்தான் (பிலி. 3:5).
2.1 நாளா.7:10இல் இன்னொரு பென்யமீனைப் பற்றிச் சொல்லியுள்ளது.
3. அந்நிய பெண்களை விவாகம்பண்ணினவன் (எஸ்றா. 10:32).