பெனியேல் (Peniel)
(தேவனுடைய முகம்)
இது யாக்கோபு யாப்போக்குத் துறையைக் கடந்த இடம். அந்த இடத்தில் தேவனை முகமுகமாய்க் கண்டேன் என்று சொல்லி, பெனியேல் என்று பேரிட்டான் (ஆதி. 32:30). பிற்காலத்தில் இவ்விடத்தில் ஒரு கோபுரம் கட்டப்பட்டது. கிதியோன் மீதியானியரைத் தோற்கடித்தபோது, இதையும் அழித்துப் போட்டான் (நியா. 8:8). யெரொபெயாம் திரும்பவும் இதைக் கட்டினான் (1 இரா. 12:25).