மக்கெதோனியா (Macedonia)
இது துவக்கத்தில் கிரேக்க தேசத்தின் வடபாகம். அப்பொழுது ஓர் அற்ப தேசமாயிருந்து, பின்பு பிலிப்பு, அவனுடைய மகன் மகா அலெக்சாண்டர் என்பவர்களின் காலங்களில் வல்லமையான இராஜ்யமாயிற்று (கி.மு. 356-323). பழைய ஏற்பாட்டில் இதன் பெயர் சொல்லப்படாதிருந்தாலும் தானி. 8:5-8இல் குறித்துள்ள வெள்ளாட்டுக்கடா இத்தேசத்து இராஜாவைக் கருதுகிறது.
புதிய ஏற்பாட்டில் நாள்களில் மக்கெதோனியா ரோமருடைய அரசாட்சிக்குக் கீழிருந்தது (கி.பி. 146). அதில் இருந்த பட்டணங்கள் பிலிப்பி, தெசலோனிக்கே, பெரோயா என்பவைகள். இவ்விடங்களில் சுவிசேஷம் கூறப்பட்டு, சபைகளும் இருந்தன. பவுலும் இவ்விடங்களுக்குப் போனான் (அப். 19:21).
பவுல் ஒரு தரிசனத்தில் மக்கெதோனியா தேசத்தான் தன்னை அழைத்தாகக் கண்டான்.
மக்கெதோனியா சபையார் எருசலேமில் பஞ்சம் உண்டானபோது அங்குள்ள தரித்திர சகோதரருக்கு உதவிசெய்தார்கள் (ரோமர். 15:26). பவுல் இதைப்பற்றி தெசலோனிக்கே சபைக்கு எழுதுகிறான் (1 தெச. 1:7,8).
பவுல் மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றுக்குத் தலைமையான பிலிப்பி பட்டணத்துக்குப் போய்ப் பிரசங்கித்தான் (அப். 16:12). அவ்விடம் விட்டுப்போனபின் திரும்பவும் அங்கே போக விரும்பினான் (அப். 20:1; 2 கொரி. 1:16). மக்கெதோனியா சபையார் எருசலேம் கிறிஸ்தவர்களுக்குச் சந்தோஷமாயும், உதாரத்துவமாயும் கொடுத்ததைப்பற்றி புகழ்ந்து பேசுகிறான் (2 கொரி. 8:1-6).
மக்கெதோனியராகிய காயுவும், அரிஸ்தர்க்கும் பவுலுக்கு வழித்துணையாய்ப் போய் இருந்தார்கள் (அப். 19:29).
முதலாம் காவலிருப்பின் பிற்பாடும் பவுல் இவ்விடம் போனதாகத் தெரிகிறது (பிலி. 1:25; 1 தீமோ. 1:3).
மக்கதோனியா - பிலிப்பு
மகா அலெக்சாந்தரின் தகப்பன்.