மம்ரே (Mamre)
(கொழுப்பு)
1. கோத்திரப் பிதாக்களின் நாள்களில் இது எபிரோன் நாட்டின் ஒரு பகுதி.
ஆபிரகாம் இவ்விடத்தில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தான். அங்கே கர்த்தருக்கு ஒரு பலி பீடத்தைக் கட்டினான். கர்த்தர் அவனுக்குத் தரிசனமானார் (ஆதி. 13:18; 18:1).
இவ்விடத்தில் அவன் மூன்று புருஷரை உபசரித்த வேளையில் சோதோமுக்கு வரப்போகிற முடிவு அவனுக்குச் சொல்லப்பட்டது (ஆதி. 18:4-33).
இதற்கு அருகில் மக்பேலா குகை இருந்தது. அந்தக் குகையில் சாராள், ஆபிரகாம், ஈசாக்கு, லேயாள், யாக்கோபு என்பவர்கள் அடக்கம்பண்ணப்பட்டார்கள் (ஆதி. 23:17,19; 49:30,31; 50:13).
2. ஆபிரகாமோடு சேர்ந்து கெதர்லாகோமேரைத் தோற்கடித்த ஓர் எமோரிய அதிபதி (ஆதி. 14:13,24).