« Back to word list

மாகோகு (Magog)

யாப்பேத்தின் சந்ததியார் என்று சொல்லப்பட்ட ஒரு பூர்வீக ஜனம். இவர்கள் மிலேச்ச ஜாதி. மாகோகு தேசத்தின் அதிபதி கோகு. கடைசி நாள்களில் இஸ்ரவேலருக்கு விரோதமாக இவர்கள் போவார்கள் என்றும், அப்போழுது கர்த்தர் அவர்களைத் திருப்பி அனுப்பிவைப்பாரென்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது (எசே. 38:2).

சாத்தான் பூமியின் இராஜாக்களாகிய கோகையும், மாகோகையும் யுத்தத்துக்குக் கூட்டிக் கொண்டு வருவான் என்பது கடைசி நாள்களில் நடக்கப்போகிற யுத்தத்தைக் குறிக்கிறது. ஜாதிகள் பரிசுத்தவான்களுடைய பாளயத்தையும், நகரத்தையும் வளைந்து கொள்ளும்போது வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சிக்கும் (வெளி. 20:8-10).

« Prev 449 / 564 Next »