மாசா (Massah)
(சோதனை)
1. இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணி ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள். அங்கே தண்ணீர் இல்லாததினால் ஜனங்கள் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தரின் சொற்படி மோசே கன்மலையை அடித்தபோது, தண்ணீர் புறப்பட்டது. ஜனங்கள் வாதாடினதினிமித்தமும், கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும் அந்த இடத்துக்கு மாசா என்று மோசே பேரிட்டான் (யாத். 17:1-7).
மாசா(Massa)
(பாரம்)
இவன் ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் மகன் (ஆதி.25:14; 1 நாளா.1:30).