மார்த்தாள் (Martha)
(எஜமாட்டி)
இவள் எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள பெத்தானிய ஊராள். இவளுக்கு மரியாள் என்ற சகோதரியும், லாசரு என்ற சகோதரனும் இருந்தார்கள் (லூக்கா. 10:38-41; யோவான் 11:1).
இயேசு பிரயாணம்பண்ணி, பெத்தானியாவில் பிரவேசித்த போது, மார்த்தாள் அவரைத் தன் வீட்டில் ஏற்றுக் கொண்டாள். அவள் அவரை உபசரிக்கிற வேளையில் ஆயத்தமாயிருந்தபோது, மரியாளோ அவர் போதனையைக்கேட்டுக் கொண்டிருந்தாள். இயேசு அவளை நோக்கி, "மார்த்தாளே! நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே" என்றார் (லூக்கா. 10:38-41).
பிற்பாடு லாசரு வியாதியாயிருந்தபோது, மார்த்தாள் அவருக்கு ஆள் அனுப்பி, அவர் வந்து லாசருவை உயிர்த்தெழுப்பினார் (யோவான் 11:1-44)
பின்பு பஸ்கா பண்டிகைக்கு முன் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள். மார்த்தாள் பணிவிடை செய்தாள் (யோவான். 12:1-8; மத். 26:6).