« Back to word list

மாற்கு (Mark)

எருசலேமிலிருந்த ஒரு கிறிஸ்தவ ஸ்திரீயாகிய மரியாள் என்பவளின் மகன். பவுலுடைய முதலாம் சுவிசேஷப் பிரயாணத்தில், பெர்கே பட்டணம் மட்டும் கூடப்போனவன். (அப். 11:12; 13:13).

இவன் பவுல், பர்னபா என்பவர்களோடு சுவிசேஷப் பிரயாணத்தில் கூடப் போயிருந்தும், பெர்கேவில் அவர்களை விட்டுத் திரும்பி விட்டான்.

இதனிமித்தம் இரண்டாம் சுவிசேஷப் பிரயாணத்தில் இவனைக் கூட்டிக் கொண்டு போக பவுல் சம்மதியாததினால் பவுலுக்கும் பானபாவுக்குமிடையில் தர்க்கமுண்டாகி, இருவரும் ஊழிய வேளையில் பிரிந்து போக நேரிட்டது. பர்னபா, மாற்குவைத் தனக்குத் துணையாகச் சேர்த்துக் கொண்டான்.

ஆகிலும் பின்பு இவர்கள் சமாதானம்பண்ணிக் கொண்டார்கள். பவுல் ரோமாபுரியில் காவலில் இருக்கையில் மாற்குவை கொலோசெ சபைக்கு அனுப்பினான் (கொலோ. 4:10).

பேதுரு மாற்குவை என் குமாரனென்றும் குறிக்கிறான் (2 பேதுரு. 5:13).

இயேசுவைக் கெத்செமனே தோட்டத்தில் பிடித்துக் கொண்டு போகையில் பின்னே போன வாலிபன் மாற்கு என்று தெரிகிறது (மாற்கு.14:51).

இரண்டாம் சுவிசேஷத்தை எழுதினவன் இந்த மாற்கு.

« Prev 456 / 564 Next »