« Back to word list

மிகாயா (Micaiah)

(கர்த்தரை போன்றவர் யார்?)

இம்லாவின் குமாரன்; ஒரு தீர்க்கதரிசி. இஸ்ரவேலின் இராஜா ஆகாப், யோசபாத்தின் உதவியோடு கீலேயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் செய்ய ஆயத்தமாகி தீர்க்கதரிசிகளிடம் கேட்டபோது, அவர்கள் ஜெயம் கிடைக்கும் என்றார்கள். ஆனால் மிகாயாவிடம் கேட்ட போது, அவன் இஸ்ரவேல் சிதறடிக்கப்படுவார்கள் என்றான். இதனிமித்தம் ஆகாப் அவனைச் சிறைப்படுத்தினான். பின்பு யுத்தம் நடந்தபோது இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆகாபும் காயப்பட்டு மரித்துப் போனான் (1 இரா. 22:4-28).

2. யோசபாத் உபதேசம் பண்ணும்படி அனுப்பின பிரபுக்களில் ஒருவன் (2 நாளா. 17:7).

3. அலங்கம் பிரதிஷ்டை பண்ணப்பட்டபோது, பூரிகை பிடித்த

ஆசாரியரில் ஒருவன் (நெகே. 12:4).

4. கெமரியாவின் மகன். இவன் எரேமியாவின் புத்தகத்தில் உள்ளதை வாசிக்கக் கேட்டு, இராஜா அரண்மனைக்குப்போய் பிரபுக்களுக்கு அறிவித்தான் (எரே. 36:11-13).

« Prev 457 / 564 Next »