மிக்மாஸ் (Mickmash)
(மறைவான இடம்)
இது பென்யமீன் நாட்டிலுள்ள ஒரு பட்டணம். பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணும்படி மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள் (1 சாமு. 13:5). யோனத்தான் இரகசியமாய் அங்கிருந்த பெலிஸ்தரின் தாணையத்திற்குப்போய் அவர்களை முறியடித்தான் (1 சாமு. 14:1-14).
ஏசாயா எருசலேமுக்கு வரப்போகிற யுத்தத்தைப்பற்றி முன்னறிவித்து, அசீரியன் மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான் என்றான் (ஏசாயா. 10:28).
சிறையிருப்பின் பின் மிக்மாஸ் ஊரார், எஸ்றா, நெகேமியாவோடு திரும்பி வந்தார்கள் (எஸ்றா. 2:27; நெகே. 7:31; 11:31).