மிகாவேல் (Michael)
(தேவனுக்கு ஒப்பானவன்)
ஒரு பிரதான தூதன். இவன் பிரதான அதிபதிகளில் ஒருவன். “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி" என்றும் குறிக்கப்படுகிறான் (தானி. 10:21; 12:1). தேவனுக்கு முன்பாக நிற்கும் தூதர்களில் இவன் விசேஷமானவன்.
பிரதான தூதனாகிய இவன், மோசேயின் சரீரத்தைக் குறித்து பிசாசுடன் தர்க்கித்தான் (யூதா. 9).
I. வானத்தில் உண்டான யுத்தத்தில் மிகாவேல் மற்ற தூதர்களைச் சேர்த்துக் கொண்டு வலுசர்ப்பமாகிய சாத்தானை எதிர்த்துத் தோற்கடித்தான் (வெளி. 12:7).
2. கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன ஆசேர் கோத்திரத்து சேத்தூரின் பிதா (எண். 13:13).
3. காத் கோத்திரத்தாரில் இருவர் (1 நாளா. 5:13,14).
4. கெர்சோன் சந்ததியானான லேவியன் (! நாளா. 6:40).
5. இசக்கார் குடும்பத்து ஒம்ரியின் பிதா (நாளா. 27:18).
6. யோசபாத்தின் குமாரன் (2 நாளா. 21:2).
7. சிறையிருப்பிலிருந்து வந்த செப்பதியாவின் தகப்பன் மிகா வேல் (எஸ்றா. 8:8).