மீதியானியர் (Midianites)
இவர்கள் ஆபிரகாம், கேத்தூரு என்பவர்களின் சந்ததியார். அரபியா தேசத்தில் வடமேற்குப் பக்கத்தில் குடியேறின நாடோடி ஜனங்கள்.
இஸ்மேவலர். ஆபிரகாம், ஆகார் என்பவர்களின் சந்ததியார். இவ்விரு ஜாதியினரும் வனாந்தரவாசிகளும், வர்த்தகருமாய் இருந்தார்கள். யோசேப்பின் சகோதரர் அவனை இவர்கள் கையில் விற்றபொழுது இவர்கள் அவனை எகிப்தில் பார்வோனின் பிரதானியாகிய போத்திப்பாரிடம் விற்றார்கள் (ஆதி. 37:28,36).
மீதியான் தேசத்து ஆசாரியனாகிய எத்திரோவின் மகள் சிப்போராளை மோசே விவாகம் பண்ணினான் (யாத். 2:21; 3:1).பின்பு எத்திரோ அல்லது ரெகுவேல் எனப்பட்டவனின் மகனாகிய ஓபா வனாந்தரப் பிரயாணத்தில் இஸ்ரவேலருக்கு உதவியாயிருந்தான் (எண். 10:29,32).
மீதியானியரும், மோவாபியரும் ஒருமித்து, இஸ்ரவேலரைச் சபிப்பதற்காக பிலேயாமுக்குக் கூலி கொடுத்து அழைப்பித்தார்கள் (எண். 22:1-5).
மீதியான் தேசத்து ஐந்து பிரபுக்கள் எமோரியருடைய இராஜாவாகிய சீகோனுடன் சேர்ந்து இஸ்ரவேலருக்கெதிராக வந்தபோது கொல்லப்பட்டார்கள் (யோசுவா. 13:21).
மீதியானியரின் இரண்டு இராஜாக்களாகிய சேபா, சல்மூனா என்பவர்களையும், சேனை முழுவதையும், கிதியோன் கலங்கடித்தான் (நியா. 8:12).