மெகிதோ (Megiddo)
(சேனை கூடும் இடம்)
இது கட்டப்பட்ட ஒரு பட்டணம். எஸ்திரேயன், சாரோன் என்னும் சமவெளிகளுக்கிடையே இருந்த பாதைக்கு இது காவல் பட்டணமாயிருந்தது. இங்கே இருந்த இராஜாவைக் கொன்றுபோட்டு. யோசுவா இந்தப் பட்டணத்தை மனாசே கோத்திரத்துக்குக் கொடுத்தான். ஆகிலும் கானானியர் துரத்தப்படவில்லை (யோசுவா 12:21; 17:11; நியா.1:28).
பூர்வீக நாள்கள் தொடங்கி, இங்கே அநேக யுத்தங்கள் நடந்தன.
கானானிய இராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகே யுத்தம் பண்ணின வேளையில், நட்சத்திரங்கள் சிசெராவோடு யுத்தம் பண்ணின (நியா. 5:19-21).
சாலொமோன் இராஜா இதைக் கீழ்ப்படுத்திக் கட்டினான் (1 இரா.4:12; 9:15). அவனுடைய போஜன சாலை ஒன்று இங்கே இருந்தது.
அகசியா காயப்பட்டபோது, மெகிதோவுக்குப் போய் அங்கே மரித்தான் (2இரா. 9:27).
யோசியா இராஜா பார்வோன் நேகோவுக்கு எதிராகப் போன போது இவ்விடத்தில் கொல்லப்பட்டான் (2 இரா. 23:29; 2 நாளா. 35:20,22).
சகரியா இந்த இடத்தைப் பற்றி புலம்பல் சொல்லி, தீர்க்கதரிசனம் உரைத்தான் (சக. 12:11).
தேவனுடைய மகாநாளின் யுத்தம், இங்கே நடக்குமென்று குறித்துள்ளது (வெளி. 16:14-16).