மெசொப்பொத்தாமியா (Mesopotamia)
(இரண்டு நதிகளுக்கிடையில்)
திகிரிஸ், ஐபிராத்து நதிகளுக்கிடையில் உள்ள பூமியின் (கிரேக்க) பெயர். ஆரான் இந்தத் தேசத்தைச் சேர்ந்த ஒரு பகுதி.
பாபிலோனியாவிலுள்ள ஊர் என்ற இடத்திலிருந்துத் தேராகு, ஆபிராமையும், சாராயையும், லோத்தையும் கூட்டிக்கொண்டு ஆரானுக்கு வந்தான் (ஆதி. 11:31,32).
எலியேசர் ஈசாக்குக்குப் பெண் கொள்ள மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊருக்குப் போனான் (ஆதி. 24:10).
இஸ்ரவேலரைச் சபிக்கும்படி பிலேயாம் இந்தத் தேசத்திலிருந்து அழைக்கப்பட்டான் (உபா. 23:4).
ஒத்னியேல் இத்தேசத்தின் இராஜாவாகிய கூசான்ரிஷதாயீமைக் கீழ்ப்படுத்தினான் (நியா. 3:10).
அம்மோன் புத்திரர் இங்கிருந்துத் தாவீதுக்கு விரோதமாக இரதங்களையும், குதிரை வீரரையும் கூலிக்கு வரவழைத்தார்கள் (1நாளா. 19:6).
பெந்தெகொஸ்தே நாளில் இத்தேசத்தாரும் எருசலேமுக்குப் போயிருந்தார்கள் (அப். 2:9).