« Back to word list

மேசியா (Messiah)

மேசியா என்பதன் அர்த்தம் கிறிஸ்து (அபிஷேகம் பண்ணப்பட்டவர்). பழைய ஏற்பாட்டில் பொதுவாக இராஜாக்களும் ஆசாரியர்களும் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் (1 சாமு. 24:6; 2 சாமு. 19:2; 23:1).

"கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசு” என்று சொல்லப்பட்டிருக்கிறது (ஏசாயா. 45:1).

மேலும், கர்த்தரால் தமது ஊழியத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாம் (1 நாளா. 16:22; சங். 105:15).

ஆகிலும், ஆதியிலிருந்து கர்த்தர் தமது ஜனத்தை மீட்கும் பொருட்டே ஒருவனை அபிஷேகம் பண்ணுகிறதாகத் தெரிகிறது.

இந்த மேசியாவைப்பற்றி முதன் முதலாக ஆதி. 3:15இல் “அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்" என்பதோடு துவக்கி, “உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்" என்பதோடு பழைய ஏற்பாட்டுக் குறிப்புகள் முடிவாகிறது (மல். 4:2).

இதற்கிடையில், நோவாவின் தீர்க்கதரிசனம் "சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (ஆதி. 9:26). ஆபிரகாமுக்குக் கிடைத்த வாக்குத்தத்தம்; "பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்" (ஆதி. 12:3) யாக்கோபு சொன்ன ஆசீர்வாதமாவது: “சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை" (ஆதி. 49:10); பிலேயாமின் தீர்க்கதரிசனம்: "ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல் இஸ்ரவேலில் இருந்து எழும்பும்" (எண். 24:17), மோசேக்குக் கிடைத்த வார்த்தை: "உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரில் இருந்து எழும்பப் பண்ணுவேன்" (உபா.18:18.)

"உன் இராஜாசனம் என்றென்றைக்கும் நிலை பெற்றிருக்கும்" என்று நாத்தான் தாவீதுக்குச் சொன்னான் (2 சாமு. 7:15). இதிலிருந்து ஆளுகை செய்யும் ஒரு மேசியா தாவீதின் சந்ததியில் தோன்றுவாரென்பது தெளிவாகிறது.

"நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வ பயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். இது நிச்சயமான நித்திய உடன்படிக்கை" என்று தாவீது சொன்னான் (2 சாமு. 23:3-5).

வரப்போகிற மேசியாவைப் பற்றிப் பின்வரும் சங்கீதங்களில் குறிக்கப்பட்டுள்ளன. (சங். 2,6,22,40,41,68,69,72,109,110,118,132).

தீர்க்கதரிசன புத்தகங்களில் இந்த நூதன இராஜாவைப் பற்றிக் கூறியதாவது:- ஏசாயா "இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு

குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்... நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்" (ஏசாயா. 7:14; 9:6).

எரேமியா : "மேசியா நீதியுள்ள கிளை." “அவர் நாமம் நீதியாயிருக்கிற கர்த்தர்" என்பதே (எரே. 23:5,6, 33:15,16).

எசேக்கியேல் : "என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை ஏற்படுத்துவேன். அவர் என்

நான் ஜனங்களின் நடுவில்

அதிகாரியாயிருப்பார்" (எசே. 34:23; 37:24).

ஆகாய் : "அந்நாளிலே உன்னை நான் முத்திரை மோதிரமாக வைப்பேன்” (ஆகாய். 2:23).

சகரியா : "சீயோன் குமாரத்தியே, இதோ, உன் இராஜா உன்னிடத்தில் வருகிறார். கழுதையின் மேலும், கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார் (சக. 9:9).

மீகா : "பெத்லகேமே! நீ சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்" (மீகா. 5:2).

தானியேல் : பிரபுவாகிய மேசியா வருவதைப்பற்றியும், மேசியா சங்கரிக்கப்படுவதைப் பற்றியும் கூறியிருக்கிறான் (தானி. 9:25, 26).

புதிய ஏற்பாட்டின் நாள்களில், மேசியா சீக்கிரம் வருவாரென்ற நம்பிக்கை அதிகமாயிருந்தது. யோவான் ஸ்நானனும் "வருகிறவர் நீர் தானா?" என்று இயேசுவிடம் கேட்டு அனுப்பினான் (மத். 11:3). ஜனங்களும் யோவான் கிறிஸ்துவாயிருக்கலாம் என்று நினைத்தார்கள் (லூக்கா. 3:15).

அக்காலத்தில் யூதருக்குள்ளிருந்த நம்பிக்கையாவது மேசியா தாவீதின் வம்சத்தில் தோன்றி, ஒரு பெரிய இராஜ்யத்தை ஏற்படுத்தி, எருசலேமில் சிங்காசனத்தை ஸ்தாபித்து, அவர்களுடைய சத்துருக்களை வென்று, தங்களையே மேலான ஜாதியாக்குவா ரென்பதே.

இந்த நம்பிக்கையினிமித்தம் இயேசு எருசலேமுக்குப் பவனி போனபோது ஜனங்கள் கெம்பீரித்து "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா" என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் (மத். 21:9). பரிசேயரும் அவர் தாவீதின் குமாரனென்று சொன்னார்கள் (மத். 22:42),

ஆனாலும் சிலர் வேறு விதமான எண்ணங்கள் கொண்டி ருந்தார்கள். "கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருவாரென்று ஒருவனும் அறிய மாட்டான்" என்றார்கள் (யோவான். 7:27).

இன்னும் அவரை விசுவாசித்த அநேகர், "கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகம் செய்வாரோ?"என்றார்கள் (யோவான். 7:31).

அந்திரேயா, "மேசியாவைக் கண்டோம்" என்றும், சமாரிய ஸ்திரீ. "கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருவார் என்று அறிவேன்" என்றும் சொன்னார்கள் (யோவான். 1:41; 4:27)-

ஜனங்கள் யோவான் ஸ்நானனிடம் கேட்ட கேள்விகளிலிருந்து வருகிறவர் கிறிஸ்துவாய் அல்லது ஒரு தீர்க்கதரிசியாய் இருப்பாரென்று எண்ணினதாகத் தெரிகிறது (யோவான் 1:21,25). ஆகவே அவர் செய்த அற்புதங்களைக் கண்டபோது, ஜனங்கள் 'அவரே வருகிறவரான தீர்க்கதரிசி” என்று சொல்லி, அவரை இராஜாவாக்க மனதாயிருந்தார்கள் (யோவான். 6:14).

ஆனால் இயேசு, ஜனங்கள் எதிர்ப்பார்த்திருந்த மேசியாவை போல நடவாமல், தாம் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றினார்.

இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற வேளையில், "நீர் என்னுடைய நேச குமாரன்" என்றது போலல்ல (மாற்கு. 1:11). "நான் ஆதரிக்கும் என் தாசன்" (ஏசாயா 42:1) என்பதற்கிசைவாய்த் தாழ்மையான கீழ்ப்படிதல் உள்ள ஊழியக்காரன்போல் தமது அழைப்பை நிறைவேற்றினார். பாடுபட்டு, நிந்திக்கப்பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்ததினாலே, மேசியா என்பதற்கு ஒரு புதிய கருத்தைக் கொடுத்தார்.

இயேசு கிறிஸ்து, ஜனங்கள் எதிர்பார்த்த வண்ணம் உலகத்தின் இராஜாவாக இராவிட்டாலும், அவர் ஆவிக்குரிய இராஜாவாக இருக்கிறார்.

« Prev 476 / 564 Next »