மெல்கிசேதேக்கு (Melchizedek)
(நீதியின் இராஜா)
சாலேமின் அல்லது எருசலேமின் இராஜா (சங். 76:2). ஆபிரகாம் கெதர்லோகோமேரையும், மற்ற இராஜாக்களையும் முறிய அடித்து திரும்பி வருகிறபோது, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் இராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும், திராட்சரசமும் கொண்டு வந்து, அவனை ஆசிர்வதித்து, ஆயாசம் தீர்த்தபோது ஆபிரகாம் அவனுக்கு எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் (ஆதி. 14:18-20).
"மெல்கிசேதேக்கு தகப்பனும், தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாள்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமுடை யவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்" (எபி. 7:1-3).
ஆகவே இவன் ஆபிரகாமுக்கு மேலானவனும், தசம பாகம் பெறுகிற லேவி கோத்திரத்தாருக்கு முதன்மையானவனுமா யிருக்கிறான்.
இயேசுவானவர் ஆணையின்படி என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராய் இருக்கிறார் என்பது தாவீதினாலும், எபிரெயர் நிருபம் எழுதினவராலும் வெளிப்படையாய்ச் சொல்லியுள்ளது (சங். 110:4; எபி. 7:45-17).