மேவிபோசேத் (Mephibosheth)
(பாகாலின் சொல்)
இந்தப் பெயருள்ள இரண்டு பேரைப் பற்றி சொல்லியுள்ளது.
1. சவுலுடைய மகனாகிய யோனத்தானின் மகன். சவுலும், யோனத்தானும் கொல்லப்பட்டபோது, இவனுக்கு வயது ஐந்து. பெலிஸ்தருக்குப் பயந்து, இவனுடைய தாதி இவனை எடுத்துக் கொண்டு ஓடிப் போகையில் இவன் விழுந்து முடவன் ஆனான் (2 சாமு. 9:11).
பின்பு தாவீது, யோனத்தான்நிமித்தம் இவனுக்குத் தயவு காட்டி, தன் பந்தியில் தினமும் அப்பம் புசிக்கும்படி ஒழுங்கு செய்தான் (2 சாமு. 9:11).
சீபா இவனுக்கு விரோதமாகத் துரோகம் செய்த வேளையிலும், தாவீது இவனுக்கு நியாயம் செய்தான் (2 சாமு. 16:1-6,19).
இவனுடைய பெயர் மேரிபால் என்னும் குறித்துள்ளது (1 நாளா.8:34).
2. சவுலின் மறுமனையாட்டியாகிய ரிஸ்பா பெற்ற மகன். சவுல் கிபியோனியரைக் கொன்ற பாதகம் தீர, தாவீது சவுலின் சந்ததியாரில் இவனோடு கூட ஏழு பேரைக் கிபியோனியருக்கு ஒப்புக் கொடுத்தான். அவர்களை மலையின் மேல் தூக்கிப் போட்டார்கள் (2 சாமு. 21:8,9).