மொர்தெகாய் (Mordecai)
இவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு யூதன். இவனுடைய பூட்டன் கீசு. எகொனியா இராஜா சிறைப்பட்டுப் போனபோது, இவனும் பிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டான். எஸ்தர் இவனுடைய சிறிய தகப்பனின் குமாரத்தி. அவள் தன் தாயையும், தகப்பனையும் இழந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்து வளர்த்தான் (எஸ். 2:5-7).
மொர்தெகாய் அகாஸ்வேரு இராஜாவின் சூசான் அரண்மனையில் உத்தியோகம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது இராஜாவுக்கு விரோதமாய் சதியாலோசனை செய்த இருவரைப் பற்றி இராஜாவாகிய அகாஸ்வேருக்கு இவன் அறிவித்தான். இந்தக் காரியம் உண்மையென நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது (எஸ். 2:21,22).
அந்நாள்களில் பிரதான மந்திரியாயிருந்த ஆமான், யூதர் எல்லாரையும் கொன்று போட வகைதேடினான். இதினிமித்தம் அவன் குற்றவாளியாகக் காணப்பட்டு, கொல்லப்பட்ட பின் மொர்தெகாய் மந்திரியானான். யூதருக்குள் மேன்மைபட்ட இவன், இராஜாவுக்கு அடுத்தவனாய் இருந்து, தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாக்கி னான் (எஸ்.10:3).
2. செருபாபேலுடன் சிறையிருப்பிலிருந்துத் திரும்பி வந்த ஒருவன் (எஸ்றா. 2:2; நெகே. 7:6).