மோரியா (Moriah)
(கர்த்தர் பார்த்துக் கொள்வார்)
ஆபிரகாம் தன் ஏகசுதனாகிய ஈசாக்கைக் கொண்டு போய் பலியிடும்படி தேவன் சொன்ன இடம் (ஆதி. 22:2). இதுவே எருசலேமிலுள்ள மோரியாமலை எனப்படுகிறது. இங்கே தாவீது பலி செலுத்தின எபூசியனான அர்னாவின் களம் இருந்தது (2 சாமு. 24:18). பின்பு இவ்விடத்திலேயே சாலொமோன் ஆலயத்தைக் கட்டினான் (2 நாளா.3:1).
இது இஸ்ரவேலின் வணக்கத்துக்குரிய மத்திய ஸ்தானமாயிற்று.