மோரே (Moreh)
(போதகன்)
ஆபிரகாம் கானான் தேசத்துக்குப் போய் சீகேமுக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமியில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான் (ஆதி. 12:6,7).
கெர்சீம், ஏபால் மலைகள், கில்காலுக்கெதிரான மோரே சமபூமியினருகே இருக்கிறது (உபா. 11:30).
பேர் பெற்ற கர்வாலி மரங்கள் இங்கே இருந்ததாகத் தெரிகிறது (ஆதி. 35:4; யோசுவா. 24:24, நியா. 9:6).
மோரேமேடு கலிலேயாக் கடலிலிருந்துப் பத்து மைல் தூரத்திலுள்ளது. மீதியானியர், கிதியோனோடு யுத்தஞ் செய்த தருணத்தில் இங்கே பாளயமிறங்கினார்கள் (நியா. 7:1).