மோளேகு (Molech)
(ஆலோசனைக்காரன்)
மோளேகு, மில்கோம் என்னும் பல பெயர்களுள்ள ஒரு தெய்வம், அம்மோனியரின் அருவருப்பு என்றும் சொல்லியுள்ளது (1 இரா 11:5-7). இந்த தெய்வத்தை வணங்குவதற்காகப் பிள்ளைகளைத் தீக்கடக்கப் பண்ணினார்கள். இதைச் செய்யக்கூடாதென்றும் அப்படிச் செய்பவர்கள் கல்லெறியப்பட வேண்டுமென்றும் இஸ்ரவேலருக்குள் கட்டளையிருந்தது (லேவி. 20:2; 18:21).
சாலொமோன் எருசலேமில் மோளேகுக்கு மேடைகளைக் கட்டினான் (1 இரா. 11:7). ஆகாஸ், மனாசே என்னும் இராஜாக்கள் தங்கள் குமாரரை பலியாகக் கொடுத்தார்கள் (2 இரா. 21:6,2 நாளா. 28:3).
யூதா இராஜாவாகிய யோசியா மோளேக்கின் மேடைகளைத் தகர்த்தான் (2 இரா. 23:12).
எரேமியா, எசேக்கியேல் ஆகியோர் இந்த வணக்கத்தைக் கண்டித்தார்கள் (எரே. 32:35; எசே. 16:20).