« Back to word list

யாபேத் (Japheth)

(பெருகுகிறவன்)

நோவாவின் மூன்று குமாரர் சேம், காம், யாபேத் என்பவர்கள். இவர்களிலிருந்து மனுஷர் பூமியின் மேல் பெருகத் துவங்கினார்கள் (ஆதி. 5:32; 6:10; 10:1).

யாப்பேத்தின் குமாரனாகிய மாதாயிலிருந்து அசீரியா தேசத்து மேதியரும், யாவான் என்பவனிலிருந்து கிரேக்கரும், யாவானின் குமாரனாகிய தர்ஷீசிலிருந்து ஸ்பானிய தேசத்தாரும் உற்பத்தி யானார்களென்று சொல்லப்படுகிறது.

நோவா வெறி தெளிந்து விழித்தபோது, "யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான். கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்" என்றான் (ஆதி. 9:27).

« Prev 492 / 564 Next »