யாப்போக்கு (Jabbok)
(பாய்கிற)
பலஸ்தீனாவில் கிழக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஆறு. யாக்கோபு பதான் அராமிலிருந்து பிரயாணம்பண்ணிப் போகையில், இந்த ஆற்றங்கரையில் ஒரு தேவ தூதனோடு போராடினான் (ஆதி. 32:22).
இந்த ஆறு அம்மோனியரின் தேசத்து வடக்கு எல்லை. இது 60 மைல் நீளமுள்ளது. யோர்தான் ஆற்றுக்குள் பாய்கிறது (உபா. 3:16).
இஸ்ரவேலர் தங்கள் பிரயாணத்தில் சீகோனோடு யுத்தம் பண்ணி அவனைத் தோற்கடித்த பின் யாப்போக்கு வரைக்குமுள்ள அவன் தேசத்தைக் கட்டிக் கொண்டார்கள் (எண். 21:24).