யூதன் (Jew)
யூதேய தேசத்தான், தொடக்கத்தில் யூதன் எனப்பட்டான். பின்பு யாக்கோபின் சந்ததியாரெல்லாருக்கும் அந்தப் பெயர் வழங்கிற்று. ஆனாலும் கி.மு. 538இல் கோரேஸ் சிறையிருப்பிலிருந்த இஸ்ரவேலரைத் திரும்ப பலஸ்தீனாவுக்குப் போக உத்தரவு கொடுத்த பின்னரே, அந்தப் பெயர் அவர்களுக்குக் குறிப்பாய்க் கொடுக்கப்பட்டது.
வேதாகம “ஐக்கிய திருப்புதலில்" முதன்முதல் இப்பெயர் (2 இரா. 16:6)இல் காணப்படுகிறது, மேலும் யூத மார்க்கத்தைத் தழுவினவர்களுக்கும் இப்பெயர் கொடுக்கப்பட்டது.
யூத பாஷை, யூத இராஜா, யூத ஸ்திரீ எனப் பண்புச்
சொல்லாகவும் பாவிக்கப்படுகிறது (2 இரா. 18:26; நெகே. 13:24; ஏசாயா. 36:11; அப். 6:1).