« Back to word list

யூதேயா (Judea)

யூதேயா என்பது யூதருடைய நாடு. சிறையிருப்பிலிருந்துத் திரும்பி வந்தவர்களில், யூதா கோத்திரத்தார் அநேகராயிருந்ததினால், பொதுவாய் அவர்கள் யூதரென்றும், அவர்கள் நாடு யூதேயா என்றும் பெயர் வழங்கிற்று.

சில இடங்களில் முழுநாடும் யூதேயா எனப்பட்டது (லூக்கா. 23:5; அப். 2:9, 10:37). எருசலேமும், யூதேயாவும் வெவ்வேறு தேசங்கள் என்றுக் குறிக்கப்பட்டுள்ளது (மத். 4:25; மாற்கு. 1:5; லூக்கா. 5:17; யோவான். 3:22; அப். 1:8). சவக் கடலுக்கு அருகேயுள்ள தேசம், யூதேயாவின் வனாந்தரம் எனப்பட்டது (மத். 3:1).

பெரிய ஏரோது மரித்தபின், யூதேயா, சமாரியா, இதுமேயா என்னும் நாடுகள் அர்கெலாயு என்பவனின் கீழிருந்தது. அவனுக்குப்பின் யூதேயா, சீரியாவோடு சேர்ந்துள்ளது.

« Prev 500 / 564 Next »