« Back to word list

யெஸ்ரயேல் (Jezreel)

(கர்த்தர் விதைக்கிறார்)

1. இது பலஸ்தீனாவின் வட பக்கத்திலுள்ள ஒரு வெளி. கலிலேயாக் கடலுக்கு தெற்பக்கமாய் யோர்தான் ஆறு மட்டும் உள்ளது.

2. சீட்டுப் போட்டபோது இசக்காருக்குக் கிடைத்த பட்டணங்களில் ஒன்று (யோசுவா. 19:18). இது இஸ்ரவேலின் இராஜாக்கள் வாசம்பண்ணின ஒரு தலை நகர் (1 இரா. 18:45,46). நாபோத்தின் திராட்சைத் தோட்டம் இங்கே இருந்தது (1 இரா. 21:1, 23).

3. யூதா கோத்திரத்து ஏதாமின் சந்ததியானான யெஸ்ரயேல் (1 நாளா.4:3).

4. ஓசியாவின் மூத்த மகனுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளப் பெயர் (ஓசியா. 1:4).

5. இஸ்ரவேலருக்கும் இது அடையாளப் பெயராக

வழங்கப்பட்டுள்ளது (ஓசியா. 2:22),

யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு

இது மெகிதோ பள்ளத்தாக்கு என்றும் சொல்லப்படுகிறது. யோர்தானுக்கருகிலுள்ள முக்கோண வடிவமுள்ள ஒரு பெரிய சமவெளி. இதன் எல்லை, வடக்கு கலிலேயா மலைகள், கிழக்கு கில்போவா, மோரேயா என்னும் மலைகள், தெற்கும் மேற்கும் சமாரியா மலைகளும், கர்மேல் மலைத்தொடரும்.

இந்தச் சமபூமி யோர்தான் வெளியிலிருந்து மத்திய தரைக்கடல் பக்கம் போவோருக்கு முக்கிய பாதையாயிருந்தது. இதினிமித்தம் அநேக யுத்தங்களும் இவ்விடத்தில் நடந்தன (நியா. 4:5; 1 சாமு. 31:2; 1. இரா. 9:11-28).

கடைசி நாள்களில் நடக்கப்போகிற தேவனுடைய மகா நாளின் யுத்தமும் இங்கேயே நடக்குமென்று சொல்லியுள்ளது (வெளி.16:14-16).

« Prev 506 / 564 Next »