யோசேபாள் (Jehosheba)
இவள் யோராமுடைய மகள். அகசியாவின் சகோதரி, பிரதான ஆசாரியனாகிய யோய்தாவின் மனைவி. அத்தாலியாள் இராஜ குடும்பத்தாரெல்லாரையும் கொன்றபோது, அகசியா இராஜாவின் கடைசி மகனாகிய யோவாசையும் அவன் தாதியையும் ஒளித்துவைத்துப் பாதுகாத்தாள் (2 இரா. 11:2). இவள் பெயர் யோசேபியாத் என்றும் குறித்துள்ளது (2 நாளா.22:11).