ராமோத் - கீலேயாத் (Ramoth-Gilead)
காத்தியரைச் சேர்ந்த, கீலேயாத்திலுள்ள ஓர் அடைக்கலப்பட்டணம் (உபா. 4:43; யோசுவா. 20:8; 21:38). இது லேவியராகிய மெராரி புத்திரருக்குக் கொடுக்கப்பட்டது (யோசுவா. 21:38; 1 நாளா. 6:80).
சாலொமோனின் மணியகாரரில் ஒருவனாகிய கேபேரின் குமாரன் இவ்விடத்திலிருந்தான் (1 இரா. 4:13).
ஒம்ரியின் நாள்களில், சீரியர் இந்தப் பட்டணத்தைப் பிடித்தார்கள். இதைத் திரும்ப எடுக்கும்படி, ஆகாப் யோசபாத்தைக் கூட்டிக் கொண்டு போனபோது, காயப்பட்டு இறந்து போனான் (1 இரா. 22:1-40; 2 இரா. 8:28; 2 நாளா. 18:22,5).
இங்கே யெகூ இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான் (2 இரா. 9:1-4; 2 நாளா. 22:7).
பிற்காலங்களில் இந்தப்பட்டணம் மிஸ்பே என்று சொல்லப் பட்டதாகத் தெரிகிறது.