« Back to word list

ராயன் (Caesar)

ரோமாவில் அரசாட்சி செய்த ஜூலிய குடும்பத்தார் "சீசர்'' என்ற பட்டப் பெயரை எடுத்தார்கள். தமிழில் ராயன் என்று மொழி பெயர்த்துள்ளது.

காயு ஜூலியஸ் சீசர் மரித்த பின், அகுஸ்து என்பவன் “ராயன்" என்ற பட்டப் பெயரை எடுத்ததினால், அவனுக்குப் பின் வந்த ராயரெல்லாரும் இரு நூறு வருடக் காலமாய் அதை வழங்கினார்கள்.

புதிய ஏற்பாட்டுக் காலங்களில் பதினொரு ராயர் இருந்த போதிலும், நான்குபேரைப் பற்றியே வேதாகமத்தில் குறித்துள்ளது.

1. அகுஸ்து ராயன் (கி.மு. 31 - கி.பி. 14) : இவன் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான் (லூக்கா. 2:1). இந்தக் கட்டளையினிமித்தம் மரியாளும் யோசேப்பும் பெத்லகேமுக்குப் போன வேளையில், மீகாவுடைய தீர்க்கதரிசனம் (மீகா 5:2) நிறைவேறும்படி மேசியா அங்கே பிறந்தார்.

2. திபேரியு ராயன் (கி.பி. 14-37) : இவன் அகுஸ்து ராயனின் மருமகன். அவனுக்குப் பின் ராயனாய் வந்தான். இவனுடைய 15ஆம் வருடம், யோவான் ஸ்நானன் தன் ஊழியத்தைத் தொடங்கினான்.

3. கிலவுதியு ராயன் (கி.பி.1-54) : இவனுடைய நாள்களில் அகபு தீர்க்கதரிசியால் முன்னறிவிக்கப்பட்ட பஞ்சம் உண்டாயிற்று (அப். 11:28). இவனே யூதரை ரோம தேசத்திலிருந்துத் துரத்திவிட்டான். அப்பொழுது ஆக்கில்லா, பிரிஸ்கில்லா என்பவர்களும் தேசத்தை விட்டுப் போனார்கள் (அப். 18:2).

4. நேரோராயன் (கி.பி. 54-68) : இவன் கிலவுதியு ராயனின் வளர்ப்புப் பிள்ளை. இவன் தன் சகோதர முறையான பிறிற்றானிக்ஸ் என்பவனை நஞ்சு கொடுத்துக் கொன்றுபோட்டு, தான் இராஜாவானான். இவனைக் குறித்து (அப். 25:25; பிலி. 4:22)இல் சொல்லியுள்ளது.

இவன் ரோமா பட்டணத்துக்கு நெருப்பு வைத்துச் சுட்டெரித்தவனென்று எண்ணுகிறார்கள். பவுல் அபயமிட்டபின் (அப். 25:10-12). தானேபோய் தனக்காக இவனுக்கு முன் பரிந்து பேசினான்.

« Prev 537 / 564 Next »