« Back to word list

ரெபெக்காள் (Rebekah)

(சுருக்குக் கயிறு)

ஆபிரகாமின் மருமகளாகிய பெத்துவேலின் மகள். ஈசாக்கின் மனைவி (ஆதி. 22:22).

கானானியருக்குள் ஒரு பெண் பிள்ளையைத் தன் மகனுக்கு மனைவியாக எடுக்க விரும்பாமல் ஆபிரகாம் தன் ஊழியக்காரனை தன் ஜனங்கள் இருந்த மெசொப்பொத்தாமியாவுக்கு அனுப்பினான். அவன் போய் தேவனுடைய வழி நடத்துதலின்படி ரெபெக்காளை ஒரு கிணற்றடியில் சந்தித்தான். அவள் அழகானவளும், புத்தி யோசனையுள்ளவளென்றும் கண்டான். பின்பு அவன் ரெபெக்காளின் தகப்பனோடும், தமையனோடும் பேசி, அவர்களுடைய சம்மதம் பெற்றுக்கொண்டு, அவளைக் கூட்டிக் கொண்டு கானானுக்குத் திரும்பிப் போனான்.

ஈசாக்கு அவளை ஏற்றுக் கொண்டு தனக்கு மனைவியாக்கி அவளை நேசித்தான் (ஆதி. 24:40-67). பின்பு ஏசா, யாக்கோபு என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஈசாக்கு ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான். ரெபெக்காள் யாக்கோபின் மேல் பட்சமாயிருந்தாள் (ஆதி. 25:28).

ஏசா மூத்தவனாயிருந்தபடியால் தலைப்பிள்ளைச் சுதந்தரம் அவனுக்குரியது. ஒரு நாள் யாக்கோபு சிவப்பான கூழில் ஏசாவுக்கு சாப்பிடக் கொடுத்து சேஷ்ட புத்திர பாகத்தை வாங்கிக் கொண்டான் (ஆதி. 25:29-34).

ஈசாக்கு பார்வைக் குறைந்தவனாயிருந்தபடியால், அவனை ஏமாற்றி அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுக்கொண்டான். ரெபெக்காள் இதற்கு உதவியாயிருந்தாள் (ஆதி.27:19-30). இதினிமித்தம் ஏசா அவனைக் கொன்று போட யோசித்ததினிமித்தம், ஈசாக்கு மெசொப்பொத்தாமியாவுக்கு லாபானிடம் அனுப்பிவிட்டான் (ஆதி. அவனை 28:5). யாக்கோபு அங்கே இருக்கையிலே ரெபெக்காள் மரித்து, மக்பேலா குகையில் அடக்கம்பண்ணப்பட்டாள் (ஆதி. 49:31).

புதிய ஏற்பாட்டில் இவளுடைய பெயர் குறித்துள்ள இடத்தில், தேவனுடைய தீர்மானம் அவருடைய தெரிந்துகொள்ளுதலின்படியே ஆகும் என்னும், ஏசா, யாக்கோபு என்பவர்கள் பிறக்குமுன்னே,தேவனால் ரெபெக்காளுக்கு அருளப்பட்ட வார்த்தை அதை நிரூபிக்கிறது என்றும் பவுல் குறிக்கிறான் (ரோமர். 9:10).

« Prev 541 / 564 Next »