« Back to word list

லீதியாள் (Levities)

பவுல் பிலிப்பி பட்டணத்துக்குப் போயிருக்கையில் அங்கே ஆற்றினருகே ஜெபம்பண்ணக் கூடியிருந்தவர்களுக்குள், லீதியாள் என்னும் ஒரு ஸ்திரீ இருந்தாள். இவள் பிலிப்பி பட்டணத்தில் வாசமாயிருந்த, தியத்தீரா ஊராள். இரத்தாம்பரம் விற்பது அவளுடைய தொழிலாயிருந்தது. அவள் தேவனை வணங்குகிறவளாயிருந்து, பவுல் சொன்னவைகளைக் கேட்ட பொழுது, கர்த்தர் அவளுடைய இருதயத்தைத் திறந்தார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அதன்பின் அவளுடைய வீடு, சுவிசேஷகர் தங்கும் இடமாயிற்று. பிலிப்பி சபையின் தொடக்கம் இதுவே (அப். 16:13-15). பவுலும் சீலாவும் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின் புறப்பட்டு, லீதியாள் வீட்டுக்குப்போனார்கள் (அப். 16:40).

« Prev 550 / 564 Next »