லிவியாதான் (Leviatan)
இது ஜலத்தில் வசிக்கும் ஒரு ஐந்து, இது எபிரெய பதம். ஆங்கிலத்தில் அதையே எழுதியுள்ளார்கள். வேதாகமத்தில் ஐந்து இடங்களில் இது சொல்லப்படுகிறது. தமிழில், (யோபு 3:8; 41:1; ஏசாயா. 27:1)இல் "லிவியாதான்" என்றும், (சங். 74:14)இல் "முதலை” என்றும் (சங். 104:26)இல் "திமிங்கலம்" என்றும் மொழி பெயர்த்துள்ளது.
(யோபு. 3:8)இல் சொல்லப்படும் லிவியாதான், துக்கம் கொண்டாடுதலைக் குறிக்கிறது. அந்தச் சர்ப்பம் சூரியனை விழுங்குகிறதினால் சூரிய கிரகணம் உண்டாகிறதென்றும் பயங்கர சம்பவத்துக்கு முன் அடையாளமென்றும் நம்பப்பட்டது.
(ஏசாயா. 27:1)இல் சொல்லப்படும் "லிவியாதான்" என்பது இஸ்ரவேலின் சத்துருக்களாகிய அசீரியா, பாபிலோன், எகிப்து முதலிய ஜாதிகளைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ஒரு பூர்வீக கட்டுக் கதைக்கு அடுத்ததாயிருக்கலாம்.