லீஸ்திரா (Lystra)
இக்கோனியா நாட்டிலிருந்த, ரோமரைச் சேர்ந்த ஒரு பட்டணம். அகுஸ்து ராயனால் கட்டப்பட்டது. பவுல் நான்கு தடவைகளில் அங்கே போயிருந்தான் (அப். 14:6, 21; 16:1; 18:23). பவுலும், பர்னபாவும் இக்கோனியாவுக்குப் போய், பிரசங்கித்தபோது கலகம் உண்டானதினிமித்தம் லீஸ்திராவுக்கு ஓடிப்போனார்கள் (அப். 14:4-6).
லீஸ்திராவில், பவுல் பேசுகிறதைக் கேட்டுக் கொண்டிருந்த, பிறந்தது முதல் சப்பாணியாயிருந்த ஒருவன் சுகமடைந்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த இக்கோனியா ஜனங்கள், பவுலும் பர்னபாவும் இரு தெய்வங்கள் என்று சொல்லி, அவர்களுக்குப் பலி செலுத்த ஆரம்பித்த வேளையில்,அவர்கள் அதைத் தடுத்தார்கள் (அப். 14:11).
லீஸ்திராவில் ரோமர், கிரேக்கர், யூதர் என்னும் ஜாதியார் வாசமாயிருந்தார்கள். பின்பு சில யூதர் அடுத்த பட்டணங்களிலிருந்து வந்து, ஜனங்களை எழுப்பிவிட்டு, பவுலைக் கல்லெறிந்தார்கள் (அப். 14:8,19).
மறுநாளில் பவுல் புறப்பட்டு அடுத்த பட்டணங்களுக்குப் போய், அவனும் பர்னபாவும் லீஸ்திராவுக்கு வந்து, சீஷரைத் திடப்படுத்தினபின், புறப்பட்டுப் போனார்கள் (அப். 14:20-23).
சில காலங்களுக்குப் பின்பு, பவுல் லீஸ்திராவுக்குப்போன சமயத்தில், தீமோத்தேயுவைச் சந்தித்தான் (அப். 16:1,2).
கடைசியில் தீமோத்தேயுவுக்கு எழுதின நிருபத்தில், தனக்கு லீஸ்திராவில் சம்பவித்ததை நினைப்பூட்டி எழுதியிருக்கிறான் (2 தீமோ 3:11).