லேகியோன் (Legion)
புதிய ஏற்பாடு காலங்களில் ரோமருடைய இராணுவத்தின், ஒரு கூட்டத்தில் 6000 யுத்த வீரரிருந்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தில் பத்துப்படைகளுண்டு (மத். 27:27; யோவான் 18:3,12). ஒவ்வொரு படையும் நூறு பேருள்ள பத்துப் பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தலைவனுண்டு.
ஆகவே, "லேகியோன்" ஒரு பெரிய கூட்டம் என்பதைக் கருதினது. இயேசுவும் "பன்னிரண்டு லேகியோன்” என்றது இந்த அர்த்தத்திலேயே (மத். 26:53). கதரேனருடைய நாட்டில் அசுத்த ஆவி பிடித்திருந்தவனும்,
நாங்கள் அநேகராயிருக்கிறபடியால், என்பேர் "லேகியோன்" என்றான் (மாற்கு. 5:9; லூக்கா. 8:30).