« Back to word list

லேயாள் (Leah)

லாபானுடைய மூத்த மகள். கூச்சப் பார்வையான கண்ணுள்ளவள். யாக்கோபின் முதல் மனைவி. இவள் அவனுக்குப் பிரியமான மனைவியாயிராத போதிலும், உண்மையுள்ளவளாயிருந்து, தன் தகப்பனை விட்டுப்போக வேண்டி வந்த தருணத்திலும், தன் புருஷனோடு கூடிப்போனாள். அவளுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள்.ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தீனாள் என்பவர்கள்.

யாக்கோபு எகிப்துக்குப் போகுமுன், இவள் மரித்து, மக்பேலா குகையில் அடக்கம்பண்ணப்பட்டாள் (ஆதி. 29:16-35; 30:17-21; 31:14; 49:31).

லேயாள், ராகேல் என்பவர்களைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்தார் எனப்படுகிறது (ரூத். 4:11).

« Prev 556 / 564 Next »