« Back to word list

லேவி (Levi)

1. யாக்கோபுக்கு லேயாள் பெற்ற மூன்றாம் மகன். இவன் பிறந்தபோது தன் புருஷன் தன்னோடு சேர்ந்திருப்பார் என்று சொல்லி, லேயாள் “லேவி” என்று பேரிட்டாள் (ஆதி. 29:34).

பின்பு யாக்கோபு சீகேமிலிருந்த நாள்களில் தங்கள் சகோதரியாகிய தீனாளுக்கு நடந்த தீங்கினிமித்தம், சிமியோனும், லேவியும் சீகேமியரைப் பட்டயத்தால் கொன்றார்கள். அதினிமித்தம் யாக்கோபு அவர்களைக் கண்டித்தான் (ஆதி. 30:25-30). தன் கடைசிவார்த்தைகளிலும் பேசினான் (ஆதி. 49:5-7). லேவிக்கு கெர்சோன், கோகாத் மெராரி என்னும் மூன்று குமாரரிருந்தார்கள். லேவி 137 வயதில் எகிப்தில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான் (ஆதி. 46:11; யாத். 6:16).

2. இயேசுவின் முற்பிதாக்கள் இரண்டு பேர் (லூக்கா. 3:24; 29).

3. அப்போஸ்தலனாகிய மத்தேயுவின் மறுபெயர் (மத். 9:9; லூக்கா.5:27).

« Prev 557 / 564 Next »